காவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (case emission waste river Cauvery)
எனவே காவிரியில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து ஆற்றில் விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், கழிவுகள் கலப்பதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் இருந்து கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கப்படுகின்றன.
இதனால் ஆண்டுக்கு சுமார் 5 இலட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லீற்றர் கழிவுகள் கர்நாடகாவில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகின்றது.
இந்த கழிவுகளால் காவிரி கரையோரம் வாழ்கின்ற தமிழக மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றது.
இந்த வழக்கில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஜூலை மாதம் 16 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்தது.
இதில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் கழிவுகள் கலக்கப்படவில்லை என்றும், தென்பெண்ணையாறு, அர்க்காவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் தான் மாசடைந்த நிலையில் தமிழ் நாட்டுக்குள் பாய்கின்றது என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை மீது ஏற்கனவே தமிழக அரசும், கர்நாடகா அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.
இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி எ.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்ததுடன், தமிழக அரசு தரப்பில் சட்டத்தரணி ஜி.உமாபதி முன்னிலையானார்.
விசாரணை ஆரம்பமாகியும் தமிழ் நாடு, கர்நாடகா மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கை மீது எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றிய முக்கிய குறிப்புகளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..! (காணொளி)
- காவல்துறை துணை ஆணையரே என்னோடு மோதுவதற்கு தயாரா..? – கருணாஸ் சவால்..!
- ஓட்டு வாங்க குவாட்டரும், ஸ்கூட்டரும்..! – வெளுத்துவங்கிய கமலஹாசன்..!
- விநாயகர் சதுர்த்தி பந்தலில் வைத்து 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
- கருக்கலைப்பு செய்து தாய் பலியான வழக்கில் நர்ஸ் அதிரடி கைது
- ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த சுமார் 30 பயணிகளுக்கு மூக்கு, வாயில் ரத்தம்
- உற்பத்தியே இல்லாத காற்றாலை மின்வாரியத்தில் ரூ.9 கோடி ஊழல் – ஸ்டாலின் புகார்
- நிலானிக்கு எதிரான முக்கிய ஆதாரங்களை வெளியிடுவேன்! – உயிரிழந்த காந்தியின் சகோதரர் பரபரப்பு பேட்டி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; case emission waste river Cauvery