இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு

0
690
vanita accused attacking home night india tamil news

நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில், இரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு போலீசார் வெளியேற்றிவிட்டதாக, வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.vanita accused attacking home night india tamil news

நடிகர் விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள். இவர்களில் விஜயகுமாரின் மூத்த மகளான வனிதாவிற்கும், தனது குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டை உரிமை கோரி பிரச்சனை செய்வதாக தனது மகளான வனிதா மீது புகார் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமாக ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு ஒன்றுள்ளது. சினிமா படப்பிடிப்பிற்கு வாடகைக்கு விடப்படும் இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்பும் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் நடிகர் விஜயகுமார்.

மேலும் தனது மனைவி மஞ்சுளா பெயரில் இருக்கும் இந்த வீட்டை தன்னுடையது என கூறி வனிதா பிரச்சனை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வனிதா தங்கியிருக்கும் வீட்டில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் பேச மறுத்த நடிகை வனிதா, வீட்டை படம் பிடிக்க விடாமல் கேமராவை பறிக்க முயன்றார்.

இதையடுத்து நடிகர் விஜயகுமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் இது தொடர்பாக புகார் கொடுத்தார்.

இந்நிலையில், தந்தை விஜயகுமார், சகோதரர் அருண் விஜய் ஆகியோர் தூண்டுதலின்பேரில், தமது வீட்டுக்கு வந்த மதுரவாயல் ஆய்வாளர் தம்மை தாக்கி, இரவு நேரம் என்றும் பாராமல் வீட்டை விட்டு வெளியேற்றியதாக வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :