இந்தியாவில் 13,511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை! – புள்ளி விபரம்..!

0
695
schools 13511 villages india - point detail

இந்தியாவில் 13 ஆயிரத்து 511 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.schools 13511 villages india – point detail

பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய ஊரக வளர்சித்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.

அதாவது, உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 7,452 கிராமங்களில் 3,474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.

தென்னிந்தியாவில், கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை.

தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.

கர்நாடகாவில் 29 ஆயிரத்து 736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.

ஆந்திராவில் 28 ஆயிரத்து 293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :