பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவை பதவி நீக்கம் செய்து கைது செய்யுமாறு மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் மற்றும் விளையாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயாணி ஜயவிக்ரம பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். Deputy Inspector General Nalaka Silva Case Sri Lanka Tamil News
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (18) சபையில் சூடான வாக்குவாதம் இடம்பெற்ற வேளையில் கருத்துத் தெரிவிக்கையில் இவர் இதனைக் கூறினார்.
குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபரை பதவியில் வைத்துக் கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதில், தடைகள் ஏற்படலாம் என்பதனால், இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
புகையிரதத்தில் மோதி 5 யானைகள் பலி! போக்குவரத்து பாதிப்பு!
பொலிஸ் மா அதிபருக்கு எதிராக போராடுவேன்! டான் பிரசாத் தெரிவிப்பு!