நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!

0
403
Teledrama actress Nilani boyrfiend suicide, Teledrama actress Nilani boyrfiend, Teledrama actress Nilani, Teledrama actress, actress Nilani boyrfiend suicide, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News

நடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர்.

இந்நிலையில் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ஆண்டுகளாக பழகிவந்தனர். எனினும் திருமண பேசசுவார்த்தை தொடர்பாக அவர்களிடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது.

நாடக படப்பிடிப்பில் இருந்த நிலானியும் காந்தி லலித்குமாரும் திடீரென வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதன் போது காந்தி லலித்குமார் நிலானியை தகாத வார்த்தைகளால் மிக மோசமாக பேசியுள்ளார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பில் இருந்தவர்கள் காந்தி லலித்குமாரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து நிலானி, மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று, காந்தி லலித்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக புகார் அளித்தார்.

இதைக் கேள்விப்பட்ட காந்தி லலித்குமார், நேற்று கே.கே.நகர் ராஜா மன்னார் சாலையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

 

<RELATED CINEMA NEWS>>

எமது ஏனைய தளங்கள்