​ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு – உயர்நீதிமன்றம்

0
856
8-lakh rupees compensation family victims died train - high court

சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயிலில் பயணித்த சீனிவாசன் என்பவர், ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.8-lakh rupees compensation family victims died train – high court

இதையடுத்து, இழப்பீடு கேட்டு சீனிவாசன் குடும்பத்தினர் ரயில்வே தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

8-lakh rupees compensation family victims died train - high court

ஆனால், சீனிவாசன் ரயிலில் பயணம் செய்ததற்கு ஆதாரமாக டிக்கெட் ஏதும் இல்லை என கூறி, இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சீனிவாசன் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி முரளிதரன், விபத்தில் பலியாகும் பயணி, ரயில் டிக்கெட் இல்லாமல் பயணித்தார் என்பதை, ரயில்வே நிர்வாகம்தான் நிரூபிக்க வேண்டும் என கூறி சீனிவாசன் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :