மஹிந்த – மோடியின் சந்திப்பு இலங்கையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் : முன்னாள் மத்திய வங்கி ஆளுனர்

0
396
TAMIL NEWS Mahinda Modi meeting political shift Sri Lanka gabral

(TAMIL NEWS Mahinda Modi meeting political shift Sri Lanka gabral)

இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்தப்படவுள்ள சந்திப்பு வெகுவிரைவில் இலங்கையில் அரசியல் ரீதியாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

விராட் இந்துஸ்தான் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு குறித்து மஹிந்த ராஜபக்ஷவுடன் விஜயத்தில் கலந்துக்கொண்ட அஜித் நிவாட் கப்ரால் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் நல்லுறவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தற்போதைய விஜயத்தின் போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றது. இரு தரப்பினருக்குமான பேச்சுவார்த்தையின் பிரதிபலன் வெகுவிரைவில் கிடைக்கும். இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் இந்த சந்திப்பு பெரிதும் செல்வாக்கு செலுத்தும்.

மேலும், மஹிந்த ராஜபக்ஸ தொடர்பில் இதுவரை காலமும் இந்நிய மக்களிடம் காணப்பட்ட பல கேள்விகளுக்கு ஊடகங்கள் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது. இது பாரிய மாற்றமாகுவே அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

(TAMIL NEWS Mahinda Modi meeting political shift Sri Lanka gabral)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites