மன்னார் சதொச வளாகத்தில் இன்று 71 ஆவது தடவையாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது. (Mannar Excavations mystery resumes)
இதுவரை 126 முழுமையான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 120 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டு நீதிமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் ரி. சரவணராஜா மேற்பார்வையில் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச மற்றும் களனி பல்கலைகழக போராசிரியர் தலைமையில் மன்னார் ‘சதொச’ வளாகத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அகழ்வு பணியின் போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம்? என சந்தேகத்தை ஏற்படுத்தகூடிய மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
கைகள் இரண்டும் நெருக்கமாக பிணைக்கப்பட்ட நிலையிலும் கால்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று குறுக்காக பிணைக்கப்பட்ட விதத்திலும் மிகவும் நெருக்கத்துக்குள் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
குறித்த மனித எலும்புக்கூடு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டதா? அல்லது மத சடங்குகளின் அடிப்படையில் புதைக்கப்பட்டதா? என்பது தொடர்பாக எந்தவித ஊகிப்புக்களும் தற்போது மேற்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினமும் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
- ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து!
- ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!
- எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!
- தற்போதைய அரசாங்கம் இராணுவத்தினரை பழிவாங்குகின்றது- கோட்டாபய ராஜபக்ஷ
- அகில இலங்கை கரப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வந்த மாணவர் பலி!
- வியட்நாமை சென்றடைந்தார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க!
- பரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே வாழ்க்கையிலும் மாணவர்கள் சித்தியடைய வேண்டும்!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Mannar Excavations mystery resumes