ராஜகிரியவில் இன்று ஆர்ப்பாட்டம்; நாளை வேலை நிறுத்தம்!

0
647
demonstration Rajagiriya today

{ demonstration Rajagiriya today }
அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பள் அதிகரிப்பு செய்தல் உள்ளிட்ட சில் கோரிக்கைகளை முன்வைத்து இன்று (11) பகல் 12.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.

ராஜகிரிய ஆயுர்வேத சுற்றுவட்டத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சேவைகள் சங்கம் கூறியுள்ளது.

ஆயுர்வேத திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படுகின்ற வைத்தியர்கள், தாதிமார் உட்பட ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குதற் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.

இதேவேளை தமது தொழில் துறையில் காணப்படுகின்ற குறைபாடுகள் பலவற்றை முன்னிறுத்தி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது.

நாளைய தினம் இந்த வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் சந்தன சூரியாரச்சி கூறினார்.

Tags; demonstration Rajagiriya today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites