நடைப்பெறவுள்ள சர்வதேச ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ் சந்திமல் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. asia cup srilanas dinesh chandimal injury dickwella named replacement
இலங்கையில் இடம்பெற்ற உள்ளூர் இருபதுக்கு 20 லீக் பேட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் இத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆசிய கிண்ணப் போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியினை இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டது, இதில் தினேஷ் சந்திமலின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் சந்திமலின் கை விரலில் ஏற்பட்ட காயம் இதுவரை முழுமையாக குணமடையாத காரணத்தால் அவர் இத் தொடரில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் சந்திமலுக்குப் பதிலாக 16 கொண்ட இலங்கை குழாமில் நிரோஷன் திக்வெல்லவின் பெயர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
asia cup srilanas dinesh chandimal injury dickwella named replacement
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil sports news,tamil cricket news,today sports updates,tamil news sports,more sports news