இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்

0
281
Sword Cut incident today early morning Jaffna

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் தந்தை, மகன் மற்றும் பெண்ணொருவர் காயமடைந்துள்ளனர். (Sword Cut incident today early morning Jaffna)

இன்று காலை 06 மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் வீட்டில் இருந்த மூவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீடுகளிலுள்ள பொருட்களையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த குடும்பப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், மற்றொரு வீட்டில் தந்தை மற்றும் மகன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Sword Cut incident today early morning Jaffna