ஒன்றிணைந்த எதிரணியின் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்கள்

0
762
Masked groups rally Joint opponent

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இன்றைய தினம் கொழும்பில் முன்னெடுக்க ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிப் பேரணியில் 75 ஆயிரம் பேர் வரையில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Masked groups rally Joint opponent)

இந்தப் பேரணியில் முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பேரணி கொழும்பின் எப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும் என்பது இதுவரை வெளிவரவில்லை என்றும் ஜனாதிபதி இல்லம், அலரி மாளிகை உள்ளிட்டவை ஆர்ப்பாட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அவற்றை தமது கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளதாகவும், முகமூடி அணிந்த குழுக்களும் பங்கேற்கவுள்ளதாகவும் பரிகார பூஜைகளும், தெய்வ பரிகார நடவடிக்கைகளும் அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸாரால் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டை பிளவுபடுத்துதல், இராணுவத்தினரை வேட்டையாடுதல், மத்தலை விமான நிலையத்தை விற்பனை செய்ய முயற்சி, சிங்கப்பூர் ஒப்பந்தம், வாழ்க்கைச் செலவு உயர்வு, அதிகரித்த வரிச்சுமை,

மத்திய வங்கி பிணை முறி மோசடி, மாகாண சபை தேர்தலை திட்டமிட்டு பிற்போடுகின்றமை உள்ளிட்டவற்றுக்கு எதிராகவே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்கவுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Masked groups rally Joint opponent