அலரி மாளிகையில் திருமணம் நடத்த நீங்கள் தயாரா? – 21 லட்சம் ரூபாவை தயார்படுத்துங்கள்

0
329
TAMIL NEWS cost wedding Temple Trees event son Rajitha Senaratna

(TAMIL NEWS cost wedding Temple Trees event son Rajitha Senaratna)

அலரி மாளிகையில் திருமண நிகழ்வினை நடாத்துவதற்காக செலவாகும் தொகை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சதுர சேனாரட்னவின் திருமண நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த திருமண நிகழ்வு அலரி மாளிகையில் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததுடன், பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில், சதுரவின் திருமண நிகழ்வினை அலரி மாளிகையில் நடாத்துவதற்காக இருபத்து ஒரு லட்சம் ரூபா கட்டணமாக செலுத்தப்பட்டுள்ளது.

சதுர சேனாரட்ன, திருமண நிகழ்விற்கான அலரி மாளிகையை பயன்படுத்தியமைக்காக இருபத்து ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாவினை கட்டணமாக செலுத்தியுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.

அலங்காரம், உணவு, மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களின் பணம் விரயமாக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொது மக்கள் பணத்தில் இந்த திருமண நிகழ்வு நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அலரி மாளிகை எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை மறந்து விட்டு, சில தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

 

(TAMIL NEWS cost wedding Temple Trees event son Rajitha Senaratna)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites