எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்காக பாராளுமன்றம் மூடப்படாது! சபாநாயகர் திட்டவட்டம்!

0
512

நாளையும் (05) நாளை மறுதினமும் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும் என கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Sri Lanka Joint Opposition Party Protest Parliament No Postpone Tamil News

குறித்த அறிவித்தலில் கூட்டு எதிர்க் கட்சியின் நாளைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எந்தவித அறிவித்தலையும் வழங்க வில்லையென கூறப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க் கட்சியினரின் நாளைய ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்றத்தை சுற்றிவளைப்பதாக சில எம்.பி.க்கள் கூறியுள்ளனர். இதனைத் தவிர்ப்பதற்கே நாளையும், நாளை மறுதினமும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளதென தவறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.

இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை எனவும் சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites