(TAMIL NEWS Constable murdered her boyfriend receive funeral)
காதலனால் கொல்லப்பட்ட நிலையில் அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிலின் இறுதிக் கிரியை இன்று (03) பொலிஸ் அணி வகுப்பு மரியாதைகளுடன் இடம்பெற்றது.
23 வயதான சந்திமா பிரியதர்ஷனி சந்திரசேகர என்ற பொலிஸ் கான்ஸ்டபில்
ஹாலி எல – கெட்டவெல பொது மயானத்தில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் பெருமளவான பொதுமக்களும், பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த பெண் கான்ஸ்டபில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி எரிகாயங்களுடன் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்டார்.
சம்பவ தினத்தன்று உயிரிழந்த பெண், அயல் வீட்டில் இடம்பெற்ற புண்ணியதான நிகழ்விற்கு சென்று திரும்பிய நிலையில், தனது வீட்டிற்கு சென்று, தன் காதலனுக்கு உணவுப் பொதியை வழங்கியுள்ளார்.
சற்று நேரத்தின் பின்னர் குறித்த வீட்டில் இருந்து தீச்சுவாலை வௌிவந்ததை அவதானித்த அயல் வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற நீதிமன்ற விசாரணைகளின் படி, காதலனால் பெண்ணின் கழுத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட காயம் இருந்ததாகவும், பின்னர் அந்த பெண் தீவைத்து எரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஒரு படுக்கையின் கீழ் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட கான்ஸ்டபிலின் காதலன் குருகுலசூரியலாகே துசித்த நந்தன பெரேரா (27) என்பவர் கைது செய்யப்பட்டு சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஹாலி-எல ஊவா கெட்டவல தோட்டத்தின் கள உத்தியோகத்தராக பணியாற்றுபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் சிறுவயதாக இருக்கும் போதே தாயும், தந்தையும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்வதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
(TAMIL NEWS Constable murdered her boyfriend receive funeral)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி