தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்

0
522
release TamilNadu fishermen indefinite strike

டீசல் விலை உயர்வு மற்றும் இலங்கை கடற்படையினர் பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்த போரட்டத்தை தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர். (release TamilNadu fishermen indefinite strike)

இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்றைய தினம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளை விடுவிக்க வேண்டும், கடந்த ஓகஸ்ட் 5 ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் அமுல்படுத்த இலங்கை அரசுடமை ஆக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், டீசல் விலை அதிகரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்படைவதால் டீசலின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி இராமேஸ்வரம் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடவடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் ஆகும் பட்சத்தில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை வேதாரணயம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள்; கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 5 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; release TamilNadu fishermen indefinite strike