பிள்ளைகளையும், புதிய தலைமுறையினரையும் சீரழித்து வரும் போதைப்பொருளானது அனைத்து நாடுகளினதும் எதிர்காலத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. Maithiripala Sirisena Drug Problem
கல்வியறிவை பின்னடையச் செய்துள்ளது. சட்ட விரோத போதைப் பொருளைப்போன்று பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சட்ட பூர்வமானது என அடையாளப்படுத்தப்படும் போதைப் பொருள்களும் இந்த நிலமைக்குக் காரணமாக அமைக்கின்றது.
இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நான்காவது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரச தலைவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறு அரச தலைவர் ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பிம்ஸ்டெக் உறுப்பு நாடு என்ற ரீதியில் இம்மாநாட்டில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கிறோம். இன்றைய கால கட்டத்தில் அனைத்து அரசுகளும் நாடளாவிய ரீதியிலும் வலய ரீதியிலும் பன்னாட்டு ரீதியிலும் முகங்கொடுக்கும் பிரச் சினைகள் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே விளங்கு கின்றது.
எமக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார, அரசியல், சமூக ரீதியான பிரச்சினைகள் ஒன்றுக்கொன்று சமமாகவே காணப்படுகின்றன. பல உலக நாடுகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எமது பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.என்று அரச தலைவர் தெரிவித்தார்.
இன்று உலகில் காலநிலை மாற்றத்துடன் முகங்கொடுத்துள்ள முக்கிய பிரச்சினை வறுமையாகும். வறுமை அதிகரிப்புக்குப் போதைப்பொருள் முக்கிய காரணம் எனச் சுட்டிக்காட்டிய அரச தலைவர் போதைப்பொருள் பிரச்சினை முழு மனித சமூகத்திற்கும் பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் குறிப்பிட்டார். உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் முகங் கொடுத்திருக்கும் பெரும் பிரச்சி னையாக இது உள்ளது.
உலகில் அரசுகளை அமைப்பதற்கும் அரசுகளை வீழ்த்துவதற்கும் அரசியல்வாதிகளை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவதற்கும் தமக்கு வேண்டிய அரசியல்வாதிகளை அதிகாரத்துக்குக் கொண்டுவரவும் சட்டவிரோதப் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
நல்லாட்சி எண்ணக்கருவின் அடிப்படையில் ஜனநாயக முறைமையை ஏற்படுத்தி மனித சுதந்திரம், அடிப்படை உரிமைகள், ஊடகச் சுதந்திரம் என்பவற்றை உறுதிப்படுத்தி செயல் படும் அரசியல் முறைமை பற்றி முழு மனித சமூகமும் நம்பிக்கை வைத்துள்ளது. என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாம் ஜனநாயகத்தைப் பலப்படுத்தியிருக்கிறோம் எனக் குறிப்பிடுவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.பக்க சார்பின்றி அரசியல் கட்சி வேறுபாடுகள் இன்றி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடுகள் இன்றி ஊழலில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராகத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு சட்டத்துக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இன்று மனித சமூகம் முகங்கொடுத் துள்ள பிரச்சினைகள், ஒவ்வாரு நாட்டையும் பாதிக்கின்ற பிரச்சினைகள், பிராந்திய ரீதியாகவும் பன்னாட்டு ரீதியாகவும் ஏற்படுகின்ற பிரச்சினைகள் பிராந்தியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவை? எமது நட்பு நாடுகளை அவை எவ்வாறு பாதிக்கின்றன? இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வுடனும் தெளிவான நிக்ச்சித் திட்டங்களுடனும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும் என்றும் அரச தலைவர் தெரிவித்தார்.
எமது தனித்துவமான பாரம்பரிய கலாசார மரபுரிமைகள், பண்பாடுகள் நாம் கட்டியெழுப்பியிருக்கின்ற கடந்தகால அனுபவங்களுடன் மனித சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் எதிர்பார்ப்புகளுடன் கூடிய வகையில் முன்னேறிச் செல்கின்றபோது அந்த உறுதியான பயணத்திற்கு பிம்ஸ்டெக் மாநாடு பலமான அடித்தளமாக உள்ளது என்றும் அரச தலைவர் தெரிவித்தார்– என்றுள்ள னர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி