விஹாரமாதேவி, காக்கைதீவு பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!

0
691
viharamahadevi park crow island beach park

கொழும்பு, விஹாரமாதேவி மற்றும் முகத்துவாரம், காக்கைதீவு ஆகிய பூங்காவில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறுவர் பூங்காவில் விளையாட பிரவேசிக்கும் சிறார்களிடமிருந்து மணித்தியாலத்திற்கு 400 ரூபாவை தனியார் நிறுவனம் ஒன்று அறவிடவுள்ளது.(viharamahadevi park crow island beach park)

இது தொடர்பான யோசனை ஒன்று கொழும்பு மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கமைய தனியார் நிறுவனம் ஒன்றினால் இந்த பூங்காவின் ஒரு பகுதியில் இந்த விளையாட்டு பூங்கா நிர்மாணிக்கப்படவுள்ளது.

5 முதல் 10 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களிடமிருந்து 15 நிமிடத்திற்கு 100 ரூபா வீதம் அறவிடப்படவுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் நிதி குழு பரிந்துரைக்கமைய முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் ஆதரவு வெளியிட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இந்த யோசனை முன்வைப்பின் போது சபையில் பிரசன்னமாகவில்லை.

கொழும்பு மாநகர சபையின் ஜே.வீ.பி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:viharamahadevi park crow island beach park,viharamahadevi park crow island beach park,