பசுமை வெளிபூங்காவில் துள்ளிக்குதித்து விளையாடிய முதல்வர் பழனிசாமி

0
861
palanisamy chief minister played green outdoor tamil news

சேலம் மாநகராட்சி சார்பாக பசுமை வெளிபூங்கா திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சேலம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைவருமான இளங்கோவனும் இறகு பந்து விளையாடினார்கள்.palanisamy chief minister played green outdoor tamil news

சேலம் மாநகராட்சியில் உள்ள முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் நடைபயிற்சி, விளையாட்டு, உடற்பயிற்சி செய்யும் வகையில் தியான மண்டபம், மூலிகை பூங்கா, உடற்பயிற்சி மையம், நடைமேடை என சகல வசதிகளோடு சேலம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தர்மநகர் பசுமை வெளி பூங்கா, அபிராமி கார்டன் பசுமை வெளி பூங்கா, முல்லை நகர், கிழக்கு மேம்பால நகர், பிரகாசம் நகர், குறிஞ்சி நகர், பரமன் நகர், கம்பன் தெரு, அய்யாசாமி பார்க் யெல்லீஸ் கார்டன், காந்தி நகர், அபிராமி கார்டன் பசுவை வெளி பூங்கா என 12 பசுவை வெளி பூங்கா 5. 63 கோடி செலவில் அமைக்கப்பட்டது.

palanisamy chief minister played green outdoor tamil news

இந்த 12 பசுமை வெளி பூங்காக்களையும் சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அய்யாசாமி பசுமை வெளி பூங்காவில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பூங்காவுக்குள் சென்றார்.

இளங்கோவனுடன் விளையாடும் முதல்வர் :

பூங்காவிற்குள் இருந்த டென்னிஸ் மைதானம் பக்கம் சென்றதும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இளங்கோவனை கூப்பிட்டு வா டென்னிஸ் விளையாடலாம் என்க. உற்சாகத்தோடு முதல்வரும், இளங்கோவனும் களம் இறங்கி இறகு பந்து விளையாடினார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்டியை கட்டிக்கொண்டு ஓடி ஓடி எகிறி அடிக்க இளங்கோவனால் பந்து திருப்பி அடிக்க முடியாமல் திணறினார். இதை சேலம் கலெக்டர் ரோஹிணி, மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் எம்.எல்.ஏ.கள் சூழ்ந்து வேடிக்கை பார்த்தார்கள்.

பிறகு இளங்கோவன் முதல்வர் எடப்பாடியை பார்த்து நல்ல விளையாடறீங்கண்ணா என்க. நீயும் தாப்பா நல்ல விளையாடுற என்றார். சுற்றி வேடிக்கைப் பார்த்த கட்சிக்காரர்களும், நிர்வாகிகளும் ரெண்டு பேரும் நன்றாக விளையாடுறீங்க என்று கலாய்க்கும் தோனியில் பேசினார்கள்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :