பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

0
428
Pillayan's case trial adjourned

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (Pillayan’s case trial adjourned)

இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ச்சியாக விளக்கமறியலில் இருந்து வருகின்றனர்.

இவர் மீதான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, மேல் நீதிமன்ற நீதிபதி விடுமுறை காரணமாகவும் அரச சட்டத்தரணி மற்றும் சந்தேக நபர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார்.

அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம், 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் பிறப்பு நள்ளிரவு ஆராதனையில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது தேவாலயத்திற்குள்ளேயே வைத்து இனந்தெரியாத துப்பாக்கித் தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Pillayan’s case trial adjourned