கிளிநொச்சி படுகொலை : சந்தேக நபர் கைது : தொலைபேசியில் கிடைத்த ஆதாரம்

0
606
Murdered Kilinochchi woman one arrested

கிளிநொச்சி – பன்னங்கண்டி பகுதியில் ஐந்து மாத கர்ப்பிணி பெண் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.(Murdered Kilinochchi woman one arrested)

படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண் வேலை அதே ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையப் பொறுப்பதிகாரியான கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கிருஸ்னகீதன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்திற்கே அழைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொலைபேசியில் இவருடனே அதிகளவாக தொடர்பில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று இரு தொலைபேசிகளும் நீண்ட நேரமாக ஒரே கோபுர அலையிலேயே நகர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 32 வயதான நித்தியகலா நேற்றுமுன்தினம் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த யுவதி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கொலையுண்ட யுவதி ஐந்து மாத கர்ப்பிணி என கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் குறிப்பிட்டார்.

கர்ப்பம் தரித்தமையால் இந்த கொலை இடம்பெற்றிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

யுவதியின் கொலை தொடர்பான விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

யுவதி பயன்படுத்தியதாகக் கூறப்படும் கையடக்கத்தொலைபேசி மலையாளபுரம் பகுதியிலிருந்து நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச்சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யுவதியின் மேலாடை அம்பாள்புரம் பகுதியில் நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Murdered Kilinochchi woman one arrested,Murdered Kilinochchi woman one arrested,