(Maithripala Sirisena Narendra Modi currently participating discussion)
இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிசெய்து நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக தான் ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
நேபாளத்தின் இடம்பெற்றுவரும் வங்காள விரிகுடா வலய நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார ஒன்றியத்தின் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்திய பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ஜனாதிபதியுடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட இந்திய பிரதமர், எதிர்வரும் செப்டம்பர் 03 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் பிறந்த தினத்திற்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அத்துடன் நான்காவது பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதியில் அதன் தலைமைத்துவம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளமை தொடர்பில கருத்துத் தெரிவித்த இந்திய பிரதமர், பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படும் எந்தவொரு பணியையும் உரியவாறு நிறைவேற்ற தான் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், மிகுந்த அனுபவமுடைய அரசியல் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தின் கீழ் பிம்ஸ்டெக் அமைப்பு பெரிதும் பலப்படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்த இந்திய பிரதமர், அதனூடாக பிம்ஸ்டெக் மாநாட்டின் நோக்கினையும் குறிக்கோளையும் அடைவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.
(ஜனாதிபதி ஊடக பிரிவு)
(Maithripala Sirisena Narendra Modi currently participating discussion)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அய்ஸ் போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
- ‘தமிழனே விழித்திடு மகாவலியை எதிர்த்திடு’; முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
- தேசிய அடையாள அட்டைகள் கட்டணத்தில் திருத்தம்
- கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்
- நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்