வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

0
836
Hand grenade recovery Vavuniya

வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்தி பணிகள் மேற்கொண்ட போது வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. (Hand grenade recovery Vavuniya)

வவுனியா மடுக்கந்த குளத்தில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று தமது வழமையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது வெடிக்காத நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்று அப்பகுதியில் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மடுக்கந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன், குள அபிவிருத்திப் பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், விஷேட அதிரடிப் படையினரின் உதவியுடன் நீதிமன்ற அனுமதியைப் பெற்று கைக்குண்டை செயலிழப்பதற்கு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Hand grenade recovery Vavuniya