முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்க ப்பட்டமைக்குரிய சாட்சியங்கள் இருந்தால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அதை விடுத்து இனவாதம் கக்கிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். North Chief Minister Vigneswaran Statement Tamil News
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவித்ததாவது- “வடக்கு மாகாண சபையின் ஊடாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. தற்போது வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள் நடக்கவில்லை. எமது அரசு அவ்வாறு எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில் அவர் இனவாதத்தை கையில் எடுத்துள்ளார்.
வடக்கு மக்கள் உணவுக்காக அல்லாடுகின்றனர். ஆனால் முதலமைச்சர் விக்னேஸ் வரன் இராணுவ நினைவுத் தூபியை அகற்றுவது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கின்றார். அங்குள்ள மக்கள் அது தொடர்பில் பேசவில்லை. விக்னேஸ்வரனுக்கு தற்போது தேவைப்படுவது இனவாதம் மாத்திரம்தான்.
வடக்கில் காணிகள் முழுமையாக விடுவிக் கப்படவில்லை. இழப்பீடு வழங்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் பிரச்சினை என்று அந்த மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன.
கொழும்பு அரசு வடக்கு மாகாண சபைக்கு வழங்குகின்ற நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. செயற்றிறன் அற்ற மாகாண சபையின் செயற்பாட்டை மூடி மறைக்க இனவாத ஆயுதத்தை வடக்கு முதலமைச்சர் கையில் எடுக்கின்றார். மக்கள் ஆதரவை இழப்பதால், அவர் இனவாதத்தை எடுக்கின்றார் – என்றார்.
அமைச்சரவையின் மற்றொரு இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலகவும் கருத்துத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
வடக்கு, கிழக்கில் பௌத்த சின்னங்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுவதில் உண்மையில்லை. தொல்பொருள் திணைக்களத்தினர் அதனை உரிய முறையில் பேணிப் பாதுகாக்கின்றனர். வடக்கு மக்களுக்கு இராணுவ நினைவுத் தூபி தற்போது பிரச்சினையல்ல. அவர்களின் பிரச்சினைகள் வேறு. வடக்கு மக்கள் இராணுவத்தின் சேவைகள் தொடர்பிலேயே நல்லவிதமாகப் பேசுகின்றனர்“ என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யுத்தத்தில் அங்கவீனமடைந்த பிரிகேடியர்களுக்கு பதவி உயர்வு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் தடம்புரண்டதில் இளைஞன் பலி
- மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது: மர்ம நபர்களினால் தாக்கப்பட்ட பூங்காவின் அதிகாரிகள்!
- கலஹா வைத்தியசாலையில் பதற்றம்; குழந்தை உயிரிழந்த சம்பவம்
- நானுஓயா டெஸ்போட் பகுதியில் தீ: கடை முற்றாக எரிந்து சாம்பல்