பாதுகாப்பு படைகளின் பிரதான தளபதியை கைது செய்ய தீர்மானம்!

0
359

கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத் என அழைக்கப்படும் கடற்படையின் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர் தீர்மனித்துள்ளனர்.

11 இளைஞர்கள் காணாமல் போனமை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.

இதன்படி இந்த விடயம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த வழக்கு எதிர்வ்ரும் 12ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன் சந்தேக நபரான நேவி சம்பத்தை அத்தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites