சிவா இயக்கத்தில், “விஸ்வாசம்” படத்தில் நடித்து வரும் மீனா வாசு, “ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.Actress Meena Vasu exclusive Interview
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :-
”விஸ்வாசம்” படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். ”வீரம்”, ”வேதாளம்”, ”விவேகம்” படங்களுக்கு பிறகு நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இப் படத்தில் இருவரும் இணைந்துள்ளனர்.
அஜித் ஜோடியாக நயன்தாரா வருகிறார். ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். விரைவில் அங்கு படப்பிடிப்பு நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
பொங்கலுக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இப் படத்தில் அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்கிறார். அவரது தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அஜித்குமாருடன் தெலுங்கு நடிகை மீனா வாசுவும் சிறிய வேடத்தில் வருகிறார். இவர் படப்பிடிப்பில் அஜித்குமாருடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அஜித்குமாரின் உயர்வான குணங்களை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது.. :-
“ஒரு ரசிகையின் இனிய தருணம் இது. அஜித்குமாரை போன்ற ஒரு நல்ல மனிதரை என் வாழ்நாளில் பார்த்தது இல்லை. எளிமையான, இனிமையான மனிதர் அவர். ஒரு வெற்றிப் படம் கொடுத்த உடனேயே சுபாவத்தில் மாற்றம் வருவதை பல நடிகர்களிடம் நான் பார்த்து இருக்கிறேன்.
ஈகோ என்ற நாய் பின்னால் சென்றால் வெற்றி நிலைக்காது என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களெல்லாம் அஜித்குமாரின் காலை கழுவி தொட்டு வணங்கினால் அவரது உயர்வான குணத்தில் 10 சதவீதமாவது அவர்களுக்கு வரும் என்பது எனது கருத்து.”
இவ்வாறு நடிகை மீனா வாசு கூறியுள்ளார்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரியங்கா சோப்ரா : பெரும் எதிர்பார்ப்பு..!
* இதுக்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது : மகத்தின் ஆட்டத்தில் கொதித்தெழுந்த டேனியல்..!
* கபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யா-கழுதை, மும்தாஜ்-பாம்பு.. : மீண்டும் புதிய குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..!
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ. 70 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகர் விஜய்..!
* ராஷிகண்ணாவுடன் டூயட் பாடத் தயாரான விஷால்..!
* நான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..!
* யாஷிகா மேல் எனக்கு காதல் வந்தது உண்மைதான் : இரண்டு தோணியில் கால் வைத்த மகத்..!