கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகையான இரத்தின கற்கள்

0
376
Three Chinese nationals held attempt smuggle gemstones Sri Lanka

சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த பெருந்தொகையான இரத்தின கற்கள் சுங்க பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டுள்ளன.(Three Chinese nationals held attempt smuggle gemstones Sri Lanka)

இரத்தின கற்களை கொண்டு வந்த சீனப் பிரஜைகள் மூவர், கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீனப் பிரஜைகள் 39 மற்றும் 27 வயதான பெண்கள் இருவரும், 37 வயதான ஆண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.

சந்தேக நபர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய போது சுங்க பிரிவு அதிகாரிகளினால் அவர்கள் அவதானிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் ஏழு கிலோ பெறுமதியான இரத்தின கற்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி ஐந்து கோடி ரூபா என முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Three Chinese nationals held attempt smuggle gemstones Sri Lanka