ராஜீவ் காந்தியைப்போல… மோடியை கொல்ல மாவோயிஸ்ட் சதி – 5 பேர் கைது

0
746
rajiv gandhi murder style caste kill modi - maoist arrested 5-people

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது போல பிரதமர் நரேந்திர மோடியையும் மனித வெடிகுண்டு மூலம் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.rajiv gandhi murder style caste kill modi – maoist arrested 5-people

கடந்த ஜூன் மாதத்தில் மஹாராஷ்டிரா மாநிலம் கோரேகான் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதம் ஒன்றில் “ஆர்” என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில், விசாரித்தபோது :

மனித வெடிகுண்டு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது போல பிரதமர் மோடியையும் கொலை செய்ய நக்சலைட்டுகள் சிலர் திட்டமிட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில் பிரதமர் மோடியைக் கொலை செய்யும் சதித் திட்டத்திற்கு மூளையாக கருதப்படும், ஹைதராபாத்தில் உள்ள மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத், புகைப்படக் கலைஞர் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகியோரின் வீடுகளில் புனே போலீசார், நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அவர்கள் அனைவருக்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து வராவர ராவ் உள்ளிட்ட 5 பேரையும் மகாராஷ்டிர போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :