நவுறு தீவில் தற்கொலைக்கு முயற்சிக்கும் சிறார்கள்; அதிர்ச்சித் தகவல்

0
581
Refugee children Nauru Googling

அவுஸ்திரேவியாவிற்கு புகலிடம் கோரி படகுகளில் சென்று, தற்போது நவுறு தீவில் வாழ்ந்து வரும் சிறுவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

நவுறு தீவில் வாழ்ந்து வரும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பலர் தமது உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பில் கூகுளில் தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவுறு தீவில் பணிபுரியும் சுகாதார ஊழியர் ஒருவரை மேற்கோள்காட்டி அவுஸ்திரேலிய ஊடகமான ABC இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதேநேரம் நவுறுவிலுள்ள சிறுவர்கள் கடும் உடல் உளநலச் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் உயிராபத்தில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமக்கு கசிந்த ஆவணங்களின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளதாக ABC ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

நவுறுவிலுள்ள சிறுவர்கள், பல சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்த வருடம் ஜுன் மாதம் 14 வயதுச் சிறுமி தன் மீது பெற்றோலை ஊற்றி தீ வைக்க முயற்சித்துள்ளனர்.

அதேநேரம் 10 வயதுச் சிறுவன் கூர்மையான சில உலோகப் பொருட்களை தனது உடலுக்குள் செலுத்த முற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது நாடொன்றில் குடியேற்றப்படாத நிலையில் நவுறுவில் இன்னமும் சுமார் 137 சிறுவர்கள், தமது எதிர்காலம் என்ன என்பது தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடருமானால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் எனவும் அங்கு பணி புரிபவர்கள் தெரிவித்ததாக ABC செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags;