பாடசாலை சிறார்களுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே நடனம்!!

0
394
British Prime Minister Teresa may dance school children tamil news

தென்னாப்பிரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, அங்கு பாடசாலை சிறார்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார். British Prime Minister Teresa may dance school children tamil news

குறித்த விஜயத்தின் போது தெரேசா மேயை வரவேற்கும் நிகழ்வில், பாடசாலை சிறார்கள் பாரம்பரிய நடனம் ஆடியிருந்தனர். இந்நிலையில் அவர்களுடன் இணைந்து பிரதமரும் நடனமாடியுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளுக்கு 3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்றுள்ள தெரேசா மே, அதன் முதல் அங்கமாக நேற்று (செவ்வாய்க்கிழமை) தென்னாபிரிக்காவிற்குச் சென்றுள்ளார்.

இந்த விஜயத்தை தொடர்ந்து அவர் நைஜீரியா மற்றும் கென்யாவிற்கான பயணத்தை மேற்கொண்டு அந்நாட்டு தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகவுள்ளது. இந்நிலையில் ஆபிரிக்க நாடுகளுடனான பொருளாதார மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்தும் முகமாக பிரதமர் மேயின் இந்த விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- British Prime Minister Teresa may dance school children tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

  ********************************************

தொடர்புடைய ஏனைய தளங்கள்

**********************************************