நீண்ட காலமாக பெண்கள் உடை மாற்றுவதையும், குளிப்பதையும் பார்த்தவர் சிக்கினார் : சரமாரியாக வாள்வெட்டு

0
535
sword attack peradeniya

பெண்கள் நீராடுவதனையும் மாற்றுடையணிவதனையும் மறைந்திருந்து நீண்டகாலமாக பார்த்து வந்த இளைஞர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.(sword attack peradeniya )

இந்த சம்பவம் பேராதெனிய குருகம தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த தோட்டத்தில் லயன் குடியிருப்பில் வசிக்கின்ற பெண்கள் உடையணிவதனையும் அவர்கள் நீராடும் இடத்திற்கு சென்று மறைந்திருந்து பார்ப்பதனையும் இளைஞர் ஒருவர் தனது வழக்கமாக கொண்டுள்ளார்.

சில சமயங்களில் பெண்களிடம் மாட்டிக்கொண்ட சந்தர்ப்பங்களில் அவர்களை கொன்று விடுவதாக அச்சுறுத்தியும் வந்துள்ளார்.

இதனால் அச்சத்தில் திருமணமான பெண்கள் மற்றும் யுவதிகள் அச்சத்தில் யாரிடமும் தெரிவிக்காமல் சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வழமையை போன்று குறித்த இளைஞர் பெண் ஒருவர், வீட்டிற்குள் உடை மாற்றிக்கொண்டிருந்த வேளையில் மறைந்திருந்து பார்வையிட்டுக்கொண்டிருந்துள்ளார்.

அந்த தருணத்தில் குறித்த பெண்ணின் கணவர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இளைஞரின் அநாகரிக செயலை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் வீட்டின் பின்புறமாக சென்று வாள் ஒன்றுடன் வெளியே வந்து குறித்த இளைஞரை வெட்டியுள்ளார்.

இளைஞர் தப்பிச்செல்ல முயற்சித்த வேளையில் அவரின் கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

வெட்டுக்காயத்துடன் தப்பிச்சென்ற இளைஞர் தலைமறைவான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அத்துடன், வாளால் வெட்டிய நபரும் பொலிஸாருக்கு அச்சமுற்று தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில் வாள் வெட்டினை மேற்கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பெண்களின் அந்தரங்க விடயங்களை மறைந்திருந்த பார்த்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள் வெட்டினை மேற்கொண்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த இளைஞருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சைகள் வழங்கி வருவதோடு, அவரை குணப்படுத்திய பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:sword attack peradeniya ,sword attack peradeniya ,