எவ்வித சிங்களவரையும் இங்கு குடியேற்றவில்லை என்கின்றார் மைத்திரிபால சிறிசேன: இதனை மறுக்கின்றார் சி.வி.விக்கினேஷ்வரன்!

0
652
Maithripala Sirisena competition Vigneswaran

{ Maithripala Sirisena competition Vigneswaran }
முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலய திட்டத்தில் எவ்விதமான சிங்கள குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாவது கூட்டத்தில் வைத்தே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த பகுதிக்கு விரைவில் நேரடி கள விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேரடி விஜயத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் வருகை தந்து உண்மை நிலையை பார்வையிட முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி எல் வலய திட்டத்திற்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தப்போவதாக கூறுகின்றனர். ஆனால் எல் வலயத்தில் எவ்விதமான சிங்கள குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை பொறுப்புடன் கூறுகின்றேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எமக்கு அரசியல் தீர்வே மிக முக்கியமானது, உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலைபேசமாட்டோம். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த கூட்டத்திற்கு வந்திருக்கின்றோம்.

எனவே, அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வேண்டும் என எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.எனினும் மகாவலி எல் வலய திட்டத்தில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் காணப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற செயலணி கூட்டத்தின் பின்னர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டே விக்கினேஷ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

Tags: Maithripala Sirisena competition Vigneswaran

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites