மறக்க முடியுமா கலைஞரை – திரையுலக பிரபலங்கள்

0
692
india tamil news can forget artist dmk leader - film celebrities

கோவை, மதவெறி மற்றும் பிரிவினைவாதிகளை உறுதியோடு எதிர்த்து வந்தவர் கலைஞர் என நடிகர் பிரகாஷ்ராஜ் புகழாரம் சூட்டினார்.india tamil news can forget artist dmk leader – film celebrities

கோவையில் தனியார் கல்லூரி வளாகத்தில் திமுக சார்பில் கலைஞரின் புகழுக்கு வணக்கம் என்கிற நிகழ்ச்சி சனியன்று நடைபெற்றது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறக்கமுடியுமா என்கிற தலைப்பில் நடிகர்கள் சிவக்குமார், பாரதிராஜா, ராஜேஷ், ராதாரவி, ராதிகா, சத்யராஜ், நாசர், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், பிரபு, மயில்சாமி மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபு ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராஜேஷ் பேசுகையில், பிறவியிலேயே புத்திக்கூர்மையானவர் கலைஞர். எந்த ஓருகாரியத்தையும் தள்ளிப்போடமாட்டார். எதையும் மறக்கமாட்டார்.

இடஓதுக்கீட்டிற்காக போராடியவர். இறப்பிற்கு பின்பும் இடஓதுக்கீட்டிற்காக போராடியவர் கலைஞர் என புகழாரம் சூட்டினார்.

மேலும், கட்டுக்கோப்பான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப்போல, திமுகவையும் அத்தகைய கட்டுக்கோப்போடு வளர்த்தெடுத்தவர் கலைஞர் என்று எழுத்தாளர் சோ.ராமசாமி கூறியதை அவர் நினைவுபடுத்திப் பேசினார்.

இதனைதொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் பேசுகையில், நான் நேரடியாக அரசியல் பேசுவேன் என நினைத்ததில்லை.

கலைஞர் இருக்கும் வரை அதற்கான அவசியம் இல்லை. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்ற பிரிவினை சக்திகளை எதிர்த்து வந்தவர் கலைஞர்.

கலைஞர் என்றால் இனி சமூக நீதி நினைவிற்கு வரும். சமுகநீதி திட்டங்களில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருந்தவர்.

மாநில உரிமைகளுக்காக அவர் கொடுத்த குரல் இன்னும் ஒரு நூற்றாண்டு நீடிக்கும். கலைஞரின் உடல் மண்ணிலும், உணர்வு மக்களிடமும் கலந்து இருக்கின்றது என்றார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், கலைஞர் முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சர். சுதந்திர தினத்திற்கு முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்று கொடுத்தவர் கலைஞர்.

நரேந்திர மோடி குஜராத்தில் முதல்வராக இருந்தபோது, கொடிஏற்ற காரணமானவரும் கலைஞர்தான்.

கலைஞருக்கு இறப்பு என்று கிடையாது. அவர் மனிதர் அல்ல, அவர்ஒரு தத்துவம். கலைஞரின் சமூகநீதி கொள்கைகள் எப்போதும் எதிரிகளை அச்சுறுத்தி கொண்டே இருக்கும் என்றார்.

இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிவக்குமார் ஆகியோர் புகழாரம் சூட்டினர்.

இந்நிகழ்ச்சியில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :