பாரிஸ் நகரில் ஐ.எஸ் தாக்குதலில் மூவர் பலி!!

0
320
Three killed IS attack Paris tamil news

பாரிஸ் நகரின் பகுதியில் மர்ம நபர் ஒருவர், திடீரென அரேபிய மொழியில் சத்தமிட்டவாறே கத்தியால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, கவலைக்கிடமான நிலையில் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Three killed IS attack Paris tamil news

பின்னர் அந்த நபர் வீட்டுக்குள் சென்ற நிலையில் சிறிது நேரம் கழித்து வெளியில் வந்துள்ளார். அப்போது வெளியில் இருந்த பொலிஸார் சம்மந்தப்பட்ட நபரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். சம்பவத்தை தொடர்ந்து அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அனைவரையும் வெளியேற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் வயது 30களில் இருக்கலாம் என தெரியவந்துள்ள நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் இதற்கான ஆதாரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இன்று காலை தான் அல் பாக்தாதி ஜிகாத்துக்கு அழைப்பு விடுத்ததாக செய்தி வெளியானது அதை தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

tags :- Three killed IS attack Paris tamil news

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

    ***************************************

எமது ஏனைய தளங்கள்