வடக்கில் கடும் வறட்சி; 91639 குடும்பங்கள் பாதிப்பு

0
956
Severe drought north

வடக்கு மாகாணத்தில் வறட்சி காரணமாக 91 ஆயிரத்து 639 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. (Severe drought north 91639 families affected)

அந்த வகையில், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி, பளை பகுதியில் குளத்து நீர் வற்றியதால் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் என்பன நீரின்றி வாடுகின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பகுதிகளிலேயே அதிக வறட்சி நிலவுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கால்நடைகளும் பறவைகளும் நீரின்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள அதேவேளை, பொதுமக்கள் நீரின்றி நீண்ட தூரம் சென்று நீரைப் பெற்றுக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், விவசாயிகள் பயிர் செய்கை மேற்கொள்ள முடியாத நிலையிலும், கால்நடைகள் நீரின்றியும் உணவின்றியும் வாடுவதனால் கால்நடை வளர்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

வட மாகாணத்தில் வறட்சியால் சுமார் 3 இலட்சத்து 19 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Severe drought north 91639 families affected