விடுதலைப் புலிகள் என பொறிக்கப்பட்ட துப்பாக்கி ஆயுதங்களுடன் 7 பேர் கைது

0
1360

அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் எனக் கூறப்படும் நபர் ஒருவருக்கு சொந்தமான கண்டி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. (Minister Coordination Secretary home weapons recovery)

3 ஆயுதங்கள், துப்பாக்கி ரவைகள், வாள்கள், போலியான வாகன இலக்கத் தகடுகள் மற்றும் ஒரு ஜோடி கை விலங்குகளும் மற்றும் இந்த இல்லத்தில் இருந்த 07 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரும், விசேட அதிரடிப் படையின் பொலிஸ் குழுவினரும் நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் என குறிப்பிட்டிருந்ததாக இந்தப் பிரதேசத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளும் போது, ஒருங்கிணைப்பு செயலாளரும் அவரின் மகனும் தப்பியோடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்களில் கைத்துப்பாக்கி ரவைகள் 25, ரிபீடர் ரவைகள் 13, வாள்கள் 06, போலியான வாகன இலக்கத் தகடுகள் 06, கைவிலங்கு ஒரு ஜோடியும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 07 நபர்களில் ஒருவர் தமிழர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பன்வில, பேராதெனிய மற்றும் குருநாகல் பிரதேசத்தில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்வதற்காக தேடப்படும் அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என கூறப்படும் நபர், இந்த பிரதேசத்தில் இலட்சக் கணக்காண பணம் வட்டிக்கு கொடுப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் அரசாங்கத்திலும் மற்றும் எதிர்கட்சியிலும் உள்ள பல அரசியல்வாதிகளுடன் அண்மைய தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Minister Coordination Secretary home weapons recovery