யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. (Drainage marine resources waste water jaffna Teaching Hospital)
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முன்தினம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி இன்றைய தினம் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் உயிரியல் கழிவுகளை அகற்றும் பொறுப்பு தனியார் நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்த நிறுவனம் உயிரியல் கழிவுகளை சுத்தம் செய்யாமல் நேரடியாக கடலுக்குள் கொட்டுகின்றது.
இது மிக ஆபத்தானதுடன், கடல் வளம் பாதிக்கப்படுவதாகவும் கடற்றொழிலாளர்களும் ஆபத்தை எதிர்கொள்வார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
கழிவு அகற்றலுக்காக இந்த நிறுவனத்திற்கு போதனா வைத்தியசாலை நிர்வாகம் பெருந்தொகை பணம் வழங்குகின்ற போதிலும் அந்த நிறுவனம் தனது பணியை சரியாக செய்யாமல், யாழ். சிறைச்சாலைக்கு அருகிலான பகுதி ஊடாக கழிவுகளை கடலுக்குள் கொட்டுவதாகவும் வடமாகாண சபையில் கூறப்பட்டது.
இந்த விவகாரம் உண்மையானதென யாழ். மாநகர சபை ஆணையாளரும் குறிப்பிட்டதுடன், இந்த விடயத்தில் நடவடிக்கை எடுக்கும் சட்டவலு இல்லாததால் தலையிட முடியாதுள்ளதாக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.
இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை உரிய நியமங்களுக்கமைய சுத்திகரிக்காமல் குடாக்கடலில் கலக்க விடுதல் தொடர்பாக மாநகர சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் த. சத்தியமூர்த்தி விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
வைத்தியசாலையில் இருந்து, யாழ். பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும் கழிவு நீர் உரிய நியமங்களுக்கு அமைய சுத்திகரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை பரிசோதிப்பதற்காக நேரடியாக ஆராயுமாறு வைத்தியசாலைப் பணிப்பாளரைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவர் இன்று காலை குறிப்பிட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு நேரில் சென்றிருந்தார்.
அந்த இடத்துக்குச் சென்ற போது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்புப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதிப்படுத்தியதோடு, விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேஸ்புக் ஊடாக பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர் கைது
- தமிழர்கள் அடிமையாக்கப்பட்டதனால் தான் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார்; சிறீதரன்
- முல்லைத்தீவில் உயர்தரப் பரீட்சைக்கு சென்ற மாணவி கடத்தி பாலியல் துஷ்பிரயோகம்
- கோட்டபாய உள்ளிட்ட 4 பேருக்கு அதிரடி அறிவிப்பு
- 79 வயது தாயின் கன்னத்தில் அறைந்த மகள் கைது
- அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Drainage marine resources waste water jaffna Teaching Hospital