யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்

0
893
Violence incident Jaffna Kokuvil area

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், மீண்டும் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. (Violence incident Jaffna Kokuvil area)

கொக்குவில் பகுதியிலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டிற்குள் நேற்றிரவு புகுந்த கும்பல் ஒன்று, அங்குள்ளவர்களை அச்சுறுத்தி வீட்டு பொருட்களை அடித்துடைத்து தப்பித்துச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு செய்துள்ளார்.

கொக்குவில் சம்பியன் வீதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், 3 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

நால்வர் வீதியில் நிற்க இருவர் வீட்டுக்குள் சென்று அட்டூழியத்தில் ஈடுபட்டதாகவும் குறித்த கும்பலின் கைகளில் பொல்லுகள் உட்பட கூரிய ஆயுதங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உட்பட வீட்டில் இருந்த பெறுமதியான பொருள்களை அடித்து உடைத்துவிட்டு குறித்த கும்பல் தப்பித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வீட்டில் இருந்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வைத்தியர் இமானுவேல் சாந்தகுமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த அட்டூழிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் பல வழிகளிலும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், இவ்வாறான குற்றச்செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Violence incident Jaffna Kokuvil area