கடந்த 2001-ம் ஆண்டு அல்கொய்தா பயங்கரவாத அமைப்பினர் அமெரிக்காவில் ராணுவ தலைமையகம் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் தாக்குதல் நடத்தி 3 ஆயிரம் பேரை கொன்று குவித்தனர். Taliban Wish Direct Talk America Step Afghanistan War Tamil News
தலீபான்களுக்கு புகலிடம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து, தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப்படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் மூண்டது.
தொடர்ந்து 18-வது ஆண்டாக நீடித்து வரும் இந்த போரில் எண்ணிலடங்காத பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
சமீபத்தில் கஜினி நகரை பிடிப்பதற்காக தலீபான்கள் கடுமையாக சண்டையிட்டனர். இந்த சண்டையில் ஆப்கானிஸ்தான் படையினர் 100 பேரும், அப்பாவி பொதுமக்கள் 35 பேரும் பலியாகினர்.
இந்த நிலையில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி தலீபான்கள் தலைவர் மவுலவி ஹைபதுல்லா அகுன்ஜதா வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு இருக்கிற வரையில் அமைதிக்கு வழி இல்லை. அமைதி திரும்ப வேண்டும் என்றால் எங்களுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என கூறி உள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- மூன்று வகை பூச்சிக்கொல்லிகளின் தடை; அத்துரலிய ரத்ன தேரர் குற்றச்சாட்டு
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்