உலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள சிறுமியும் சைக்கிளும்

0
636

கேரள வெள்ள நிவாரண நிதியாக விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி, தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்த பணம் ரூ.9000 கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடந்த பல மணி நேரமாக வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. Kerala Cycle Girl Anupriya

இந்த சிறுமியின் கொடைத்தன்மையை பாராட்டாதவர்களே இல்லை என்ற நிலையில் சிறுமியின் சைக்கிள் ஆசையை நனவாக்க ஹீரோ சைக்கிள் நிறுவனம் தற்போது முன்வந்துள்ளது.

இதுகுறித்து ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் டுவிட்டரில், அனுப்ரியாவுக்கு புதிய சைக்கிளை பரிசாக தர முடிவு செய்துள்ளதாகவும், அவர் தன்னுடைய அனுப்பவும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த டுவீட்டை பார்த்த அனுப்ரியா தனது முகவரியை அனுப்பியுள்ளதாக சற்றுமுன் செய்தி வெளிவந்துள்ளதால் இன்னும் ஒருசில மணி நேரத்தில் அவருக்கு புதிய ஹீரோ சைக்கிள் டெலிவரி செய்யப்படும் என தெரிகிறது.

கோடி கோடியாய் பணம் இருப்பவர்கள் நிவாரண நிதியாக ஒருசில லட்சங்கள் கொடுப்பதைவிட தனது வாழ்நாள் கனவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தை அனுப்ரியா என்ற சிறுமி கொடுத்த தொகை மிகப்பெரிய தொகை என்பதால் அவருக்கு சைக்கிள் மட்டுமின்றி புகழும் வீடுதேடி வந்திருப்பதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.