அளுத்கம கல்வியற் கல்லூரியில் கல்வி பயிலும் கிளிநொச்சியைச் சேர்ந்த மாணவி ஒருவர் இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். (Infection heart kilinochchi student kills)
கிளிநொச்சி விசுவமடு மேற்கை சேர்ந்த 23 வயதான சிவலிங்கம் ஜிந்துஜா என்ற மாணவியே உயிரிழந்தவராவார்.
அழுத்கம கல்வியற் கல்லூரியில் 2 ஆம் வருடத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு கல்விச் சுற்றுலா மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென மாணவி சுகயீனமுற்றதை அடுத்து, மாணவி வீட்டாரிடம் கல்வியல் கல்லூரி நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டார்.
அதனையடுத்து மாணவியை வீட்டார் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதன்பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மாணவியின் உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி நா. பிரேம்குமார், மாணவியின் இருதயத்தில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாகவே உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி
- ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Infection heart kilinochchi student kills