ஹாரர், காமெடி மற்றும் த்ரில்லர் படமாக உருவாகும் ‘காட்டேரி’ ஃபர்ஸ்ட் லுக்

0
272
horror comedy thriller movie Katerri firstlook tamil news

இயக்குனர் டி.கே. ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தையும் இயக்கினார். தற்போது ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். horror comedy thriller movie Katerri firstlook tamil news

ஹீரோவாக வைபவ் நடிக்க, அவருக்கு ஜோடிகளாக வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா, மணாலி ரத்தோட் என 4 ஹீரோயின்களுடன் வலம் வரப் போகிறாராம்.

இப்படத்தினை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க, இப்படத்தின் கதையை இயக்குனரே எழுதியுள்ளாராம்.

காமெடி நடிகர்கள் கருணாகரன், ரவி மரியாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இதற்கு விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, பிரசாத் இசையமைப்பில், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணி புரிகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் ட்வீட்டரில் வெளியிட்டது.

Tags: horror comedy thriller movie Katerri firstlook tamil news

எமது ஏனைய தளங்கள்