தமிழ் மக்களிடம் எந்த ஆயுதமும் இல்லை, முஸ்லிம் மக்களிடம்தான் இருக்கிறது என்கிறார் முன்னாள் போராளி

0
446
Tamil people dont weapons Muslims hav former militant

(Tamil people dont weapons Muslims hav former militant)

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களிடம் தற்போது எந்தவொரு ஆயுதமும் இல்லை என்றும் முஸ்லிம் மக்களிடமே ஆயுதம் இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இம்ராசா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்கள் அனைவரும் ஆயுதங்களை முஸ்லிம்களுக்கு விற்றுவிட்டு சென்று விட்டனர். தற்போது முஸ்லிம்களிடமே ஆயுதம் இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு இனத்திடம் ஆயுதம் இருப்பது ஆபத்தானது. இதனால் ஏனைய இனத்தவர்களுக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படாது அரசாங்கம் இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டது தமிழ் மற்றும் சிங்கள மக்களே. ஆனால் அதன்போது முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்தார்கள்.

இது எங்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. இப்போது எமக்கு நாட்டுப்பற்று இருக்கின்றது. நாம் இலங்கையர் என்ற வகையிலேயே செயற்படுகின்றோம்.

அதேவேளை, அரசாங்கமே புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி வளர்த்துவிட்டது என்றும், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(Tamil people dont weapons Muslims hav former militant)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites