அழகுக்கலை பெண் நிபுணர் ஒருவரை அவரின் கணவன், கொலை செய்வதாக அச்சுறுத்தி முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (Husband forcibly kidnapped wife three wheeler)
இதன்போது, ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து கீழே பாய்ந்த குறித்த பெண், பொலிஸாரின் உதவியை நாடியுள்ளார்.
இந்தச் சம்பவம் பண்டாரகமை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் கீழே பாய்ந்ததனால் அவரின் நெற்றி, மூக்கு மற்றும் கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதனால் பொலிஸார் இவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
பேலியகொடை பிரதேசத்தில் அழகுக்கலை நிலையம் ஒன்றை நடத்திவரும் 23 வயதான அழகிய பெண்ணான இவர், 4 வயது பிள்ளையின் தாயாவார்.
போதைப்பொருள் மற்றும் பயங்கர ஆயுதங்களை தன்வசம் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இவரது கணவனின் கொடுமைகளினால் அவருக்கு எதிராக கோட்டை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவன் தன்னை இரும்பு தடியால் தாக்கியதாகவும் இவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் பேலியகொடை பொலிஸில் பதிவாகியுள்ளதாகவும் இந்த அழகுக்கலை நிபுணர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தனது கணவனை விட்டுப் பிரிந்து தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், 10 நாட்களுக்கு முன்னர் கொழும்பில் வைத்து தனது கணவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, ராகமை பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றில் ஐந்து நாட்களாக கடத்தி வைத்திருந்ததாகவும் குறித்த பெண் தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு நாட்களுக்கு பின்னர் பண்டாரகமை பிரதேசத்திற்கு கடத்திக் கொண்டுவந்து வீடொன்றில் அடைத்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னை இந்த விவாரத்து வழக்கை வாபஸ் பெறுமாறு கூறி எச்சரிக்கை விடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பொலிஸார் குறித்த பெண்ணை அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் இன்று மாலை தகனம் (முழு விபரம் இதோ)
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- யாழில் சூறாவளி; ஹெலிகொப்டரில் பறந்த வினாத் தாள்கள்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Husband forcibly kidnapped wife three wheeler