தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிங்கள பொலிஸாரின் பாதுகாப்பு பற்றி குத்தி காட்டிய ரெஜினோல்ட் குரே!

0
728

பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்று வட மாகாணத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் இரண்டொரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம் என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். North Province Governor Reginald Cooray Mullaitivu Speech Tamil News

முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் , வடக்கின் வெவ்வேறு பிரதேசங்களில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ரெஜினோல்ட் குரே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

வட மாகாணத்தில் இடம்பெற்ற முப்பதாண்டு யுத்தத்தின் பின்னர் இரண்டொரு ஆயுதங்கள் கண்டெடுக்கப்படலாம். இது பெரிய மழை பெய்து முடிந்தவுடன் நிலத்தில் ஈரம் இருப்பது போன்றதே தவிர யுத்தத்தின் மறு ஆரம்பமல்ல.

இன்று வடக்கில் இருக்கின்ற அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள பொலிஸ் அதிகாரிகள். பாராளுமன்றத்திலும் சரி மாகாண சபையிலும் சரி அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள பொலிஸ் அதிகாரிகளே.

எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் இல்லை என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மேலும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites