‘நேவி சம்பத்” என்பவர் இவர் இல்லை : நீதிமன்றில் பரபரப்பு தகவல்

0
1046
navy sampath

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்ட விரோமாக தடுத்து வைத்து கப்பம் பெற்றமை, மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான ‘நேவி சம்பத்” எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. (navy sampath,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, )

எனினும் நேவி சம்பத் என்பவர் இவர் இல்லை. இவர் ஹெட்டியாராச்சி மாத்திரமே.

இவரை ஏன் தவறாக நேவி சம்பத் எனக் கூறுகின்றனர்.

இவர் நேவி சம்பத் இல்லை என கைதான கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி சார்பில் நேற்று நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி மேஜர் அஜித் பிரசன்ன நீதிவானுக்கு அறிவித்தார்.

எனினும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புனைபெயர் தொடர்பில் தனக்கு எதுவும் கூற முடியாது என அறிவித்த நீதிவான் லங்கா ஜயரத்ன, தான் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது, அனைத்து உத்தரவுகளுக்கும் சந்தேக நபரின் உண்மை பெயரான ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்றே குறிப்பிட்டுளு;ளதாக சட்டத்தரணியின் வாதத்தை நிராகரித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, நேவி சம்பத்தா என விசாரணையாளர்களிடம் நேற்று வினவிய போது, விசாரணையாளர்கள் நேவி சம்பத் எனும் சந்தேக நபரின் புனை பெயரை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:navy sampath