‘யாபா’ போதைப்பொருள் மாத்திரை வைத்திருந்த நபர் கைது

0
823
Man arrested drugs tablet Yapa

இரவு களியாட்ட விடுதி நிகழ்வுகளில் பங்குபற்றும் நபர்கள் அதிகமாக பாவிக்கும் ‘யாபா’ என்ற போதைப்பொருள் மாத்திரை ஒரு தொகையை வைத்திருந்த நபரை வாழைத்தோட்டம் செக்குவத்தை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். (Man arrested drugs tablet Yapa)

இந்த நபரிடம் இருந்த 175 போதைப்பொருள் மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளின் மதிப்பு ஐந்து இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் நபரொருவர் இந்த போதைப்பொருள் மாத்திரைகளை விநியோகத்தில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலை அடுத்து, தூதுவர் ஒருவரை அனுப்பி இந்த சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.
55 வயதான இந்த சந்தேக நபர் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Man arrested drugs tablet Yapa