வரலாறு காணாத வெள்ளத்தால் ஆடிப் போயிருக்கும் கடவுளின் சொர்க்க பூமி கேரளம்!

0
294
Kerala flood Attack People Struggle tamil news

கடவுளின் தேசம் என்று செல்லமாக அழைக்கப்படும் கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நகரமெங்கும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர்.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடும் மழை பெய்து வருவதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.(Kerala flood Attack People Struggle tamil news)

கடந்த சில நாட்களாக விடாது இடி,மின்னலுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நிரம்பி உள்ளது.மேலும் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மழை வெள்ளம் சூழ்ந்து ஏராளமான வீடுகள் இடிந்து உள்ளது. விவசாய பயிர்களும் மழையால் நாசமடைந்துள்ளது. சாலைகள் முற்றிலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

மேலும் இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. கேரள அரசு 17,974 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தொடர் மழை பெய்வதால் மீட்பு பணிக்கு துணை ராணுவத்தினர் கேரளாவிற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமாக ஒரே நேரத்தில் 26 அணைகளும் நிரம்பிவிட்டதாக மாநில அரசு கூறுகிறது. கேரளா முழுவதும், வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.உணவின்றி தவிக்கும் மக்கள், பலர் நிவாரண நிதியும், பொருட்கள் மற்றும் துணிகள் கொடுத்து உதவி வருகின்றனர்.

tags :- Kerala flood Attack People Struggle tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
காதலிக்க தொடங்கியதுமே முதலில் உள்ளாடை வாங்கி கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்… இவரா இப்பிடி???
பட ஓடியோ வெளியீட்டுக்கு அரைகுறையாக வந்த இறுதிச்சுற்று நாயகி – இளசுகளின் மனசில் இடம் பிடித்த புகைப்படம்!
செல்பியால் இளசுகளை கிறங்கடித்த நம்பர் வண் நடிகை (புகைப்படம் உள்ளே)!
கோடிகளில் தங்கக் களிப்பறை கட்டி களிப்பறையிலும் உல்லாசம் அனுபவிக்கும் விஜய்!
யாஷிகாவை காதலிப்பதாக கமலிடம் தெரிவித்த மகத்- உடனே மகத்தை பாராட்டிய கமல்!
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!

எமது ஏனைய தளங்கள்