அரச தமிழ் அமைச்சரான மனோ கணேசனிடமிருந்து வீடமைப்புத்திட்டங்களை பறிப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை மும்முரமாக இருந்துவந்தமை அம்பலமாகியுள்ளது.(sambanthan mano ganesan)
மனோ கணேசனிடமிருந்து குறித்த வீடமைப்பு திட்டத்தை பறிமுதல் செய்து மற்றொரு அமைச்சரான சுவாமிநாதனிடம் ஒப்படைக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதில் வடக்குக் கிழக்கில் வீடமைப்பு, வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை மனோ கணேசனிடம் வழங்க வேண்டாம்.
அதை மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பிலே வழங்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதாவது மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பொறுப்பில் ஒப்படைக்கவும் அதனை பிரதமருடைய பணியகத்தின் மேற்பார்வையிலும் கண்காணிப்பிலும் வைத்திருக்க வேண்டும் என்றும் இரா. சம்பந்தன் கோரியிருந்தார்.
இதனிடையே மனோ கணேசனின் கையிலிருந்து இவற்றினை சுவாமிநாதனுக்கு மாற்றுவதற்கான வலுவான காரணங்கள் எதையும் இரா.சம்பந்தன் முன்வைத்திருக்கவில்லை.
அரச அமைச்சர் மனோகணேசன் தொடர்பில் வடகிழக்கு மக்களிடையே ஓரளவு நல்லெண்ணம் உள்ளது.இந்நிலையில் வீடமைப்பு திட்டத்தை மனோகணேசன் முன்னெடுத்தால் அவருக்கு ஏற்படக்கூடிய மக்கள் ஆதரவு புலத்தை கூட்டமைப்பு விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி
- வடமாகாண அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்; ஆளுநர்
- ஓட்டுநர்களின் தொழில் அபாயத்தில்; பேரூந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில்
- 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:sambanthan mano ganesan,sambanthan mano ganesan