இந்துக்களுடன் காவடி ஏந்தி புனித யாத்திரை சென்றதால் மசூதிக்குள் நுழைய முஸ்லிமுக்கு தடை

0
393
Muslim Hindu Temple Mosque Ban

 

உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாக்பத் மாவட்டத்துக் குட்பட்ட ரச்சார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு கான். இவர், ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு நடைபெற்று வரும் காவடி புனித யாத்திரையில் கலந்து கொண்டார். அப்போது, சிவ பக்தர்களை போல பாபு கானும் கங்கை நீரை குவளையில் ஏந்திச் சென்று, ஹரித்துவாரில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்துவிட்டு திரும்பினார் Muslim Hindu Temple Mosque Ban

இந்த செய்தி நாளிதழ்களில் படங்களுடன் வெளியானது. இதையடுத்து வழக்கம் போல, பாபு கான் தனது கிராமத்தில் உள்ள மசூதிக்கு கடந்த வெள்ளிக் கிழமை தொழுகை நடத்த சென் றிருக்கிறார். அப்போது அவரை சில முஸ்லிம்கள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாபு கான் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, “காவடிகளுடன் நானும் கங்கை நீரை ஏந்தியபடி ஹரித்துவாருக்கு சென்று வந்தேன். இதனால் கோபமடைந்த சில முஸ்லிம்கள், மசூதிக்குள் நுழைய விடாமல் என்னை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸில் புகார் அளித்தேன்” என்றார்.

இந்நிலையில், பாபு கான் புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது அமைதியை குலைத்ததாக போலீஸார் வழக்கு பதிவு செய்ததுடன், 3 பேரை கைது செய் துள்ளனர். தலைமறைவாக இருக் கும் மற்றொருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பாபு கான் முறையான உடைகள் அணியாமல் மசூதியில் நுழைய முயன்றதால் அவரை தடுத்து நிறுத்தியதாக முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாக்பத் மாவட்ட இந்து ஜாக்ரன் மஞ்ச் அமைப்பின் தலைவரான தீபக் பன்மவுலி விடுத்துள்ள அறிக்கையில், “எங்கள் அமைப்பின் முழு ஆதரவு பாபு கானுக்கு உள்ளது. அவரை யாரேனும் துன்புறுத்தினால், எங்கள் இந்து அமைப்பு அமைதி யாக இருக்காது” என தெரிவித் துள்ளார். இதனால், பதற்றம் நிலவு வதால், அசாம்பாவித சம்பவங் களைத் தடுக்க அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.